Wednesday, January 13, 2016

இன்டர்நெட் உலகின் கொள்ளுத்தாத்தாவான தந்தியின் பிறப்பு – 1858 – பாகம் -1



இன்டர்நெட் உலகின் கொள்ளுத்தாத்தாவான தந்தியின் பிறப்பு – 1858 – பாகம் -1

நாம் இன்றைக்கு காணும் செய்தி பரிமாற்றம் மற்றும் நினைத்த உடன் நினைத்த விசயம் படம் வீடியோ என உலகின் எந்த பகுதிக்கும் அனுப்பும் திறனை அடைய நமது முன்னோர்கள் பட்ட கஷ்டங்களையும் .. அவை சாத்தியமானதற்கான அடிப்படை காரணம் .. தோல்வியே

ஆம் தோல்விகளே வெற்றிகளின் அடிப்படை என்று வாய்வார்த்தைகளாக இல்லாமல் .. எப்படி தொல்விகள் இன்று நாம் காணும் மிக சிறந்த விசயங்களை அடைய பயன் பட்டது என்கிற சரித்திர உண்மைகளை ... பார்ப்போம் ..

இன்று இன்டர்நெட் செயல்பட கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கிலோமீட்டர் பைபர் ஆப்டிக் கேபிள்களே காரணம் .. அவற்றின் முன்னோடியான தந்தி இப்படி கடல்வழியாக கேபிள் முலமாக முதல் முதலாக இணைக்கப்பட்ட கதையை பார்ப்போம் ..





1830-45 ஆகிய வருஷம் மனித சரித்திரத்தை புரட்டிப்போட்ட வருடங்கள் என்றே கூற வேண்டும் .. எல்லாவற்றையும் எந்தரமயமாக்க மனிதன் முயன்றுகொண்டு இருந்த காலம் அது ... (period of industrial revolution )
ஸ்டீம் என்ஜின், பாட்டரி மூலம் தந்தி இயக்கம், காட்டன் மற்றும் துணி தறிகள் எல்லாம் .. எந்திரமயமான காலம் ...




1852 வருடம் ப்ருநெல் என்கிற ஒரு மாபெரும் பொறியாளர் “great eastern” என்கிற ஒரு கப்பலை இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் எங்கும் நிற்காமல் போய் விட்டு திரும்பும் படி கட்டினார் !! ஆஸ்திரேலியாவில் அப்போது நிலக்கரி கண்டுபிடக்கப்படவில்லை!! அதுதான் மனிதன் முதலில் கட்டிய மிக மிக பிருமாண்ட முழு இரும்பினால் கட்டப்பட்ட... ப்ரோபெள்ளர் அமைந்த கப்பல் .. அதில் 4000 பேர் பயணம் செய்யாலாம்!! அதனுடைய நீளம் சுமார் 700 அடி!! காலத்தின் கொடுமை .. இந்த கப்பல் வியாபார நோக்கில் வெற்றி பெறவில்லை .. இது இவ்வளவு நபர்களை ஏற்றிசெல்ல உள்ள காலத்திற்கு சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்டதால்!!



இந்த படத்தில் காணும் Isambard Kingdom Brunel FRS (9 April 1806 – 15 September 1859) சிகார் உடன் இருப்பவரின் மூளையால்தான் இன்றைக்கு நான் எழுதும் இவற்றை உலகின் பல முலையில் இருக்கும் நீங்கள் படிக்க முடிகிறது என்றால் நம்புவீர்களா?? ஆம் இவரின் தோல்வியே .. நமது இன்டர்நெட் உலகின் வளர்ச்சியின் முதல் படி .. எப்படி என்றால் ..

1855 இல் இங்கிலாந்து முழுவதும் மற்றும் அமெரிக்காவின் பெருவாரியான நகரங்கள் தந்தியால் இணைக்கப்பட்டு விட்டன... அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் அட்லாண்டிக் கடல் வழியாக இணைக்க ஒரு மிக பிருமாண்டமான 2000 மைல் 1857 இல் ஒரு முயற்சி நடந்தது ..

இதற்காக முன்னேர்ப்பாடாக 1845-55 வரை அமெரிக்க கப்பற்படை கடல் ஆழத்தை கணக்கிட்டு .. அட்லாண்டிக் கடல் பாதையில் ஒரு ஆழமில்லா வழியை கண்டு வைத்திருந்தனர் ..

அந்த விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலத்தில் கடலில் ஆழம் செல்ல செல்ல நீர் அடர்த்தியால் ஆழத்தில் பொருள் முழுகாது என்று தவறாக எண்ணி இருந்ததும் தெரிகிறது !!

முதல் பயணம் june 1858, ஒரு நாலு கப்பல்களில் பல டன் எடை உள்ள கேபிள்களை எடுத்துக்கொண்டு 5 th August 1858 முதல் முதலாக அமெரிக்காவையும் இங்கிலாந்தையும் இணைத்தார்கள்!!

ஆனால் ஒரு 366 செய்திகள் 3942 எழுத்துக்கள் .. அமெரிக்காவில் இருந்தும் 269 செய்திகள் 2840 எழுத்துக்கள் அனுப்பியவுடன் பழுதாகி விட்டது !!

இது கடலில் எந்த இடத்தில் பழுது என்று (distance where it got disconnected) அறிந்தும் அவர்களால் அதை கடலின் அடியில் இருந்து எடுக்க முடியவில்லை .. அந்த காப்பர் கம்பியை சுற்றி செய்திருந்த இன்சுலேசன் தவறு!! அவர்கள் அளவுக்கு அதிகமாக மின்சாரத்தை செலுத்தி அந்த இன்சுலேசனை ஓட்டை ஆக்கி விட்டனர் ..

பின்னர் ஏழு ஆண்டுகள் காத்திருந்து .. கடல் அடியில் அரிக்காத இன்சுலேசன் உடன் ஒரு 2000 மைல் கேபிள்களை எடுத்துக்கொண்டு மறுபடி கிளம்பி அமெரிக்க செல்லும் வழியில் அறுத்து கடலில் விழுந்து மறைந்து விட்டது.. இந்த முறையும் அவர்களால் அதை மீட்க முடியவில்லை ..

பின்னர் நாம் முதலில் பார்த்த வியாபாரமே இல்லாத பயணியர் கப்பலை கொண்டு வர செய்து அது முழுவதும் இயந்தரங்களை அமைத்து (இதற்க்கு முன்பாக நான்கு கப்பல்களில் சென்ற பொருள்கள் இந்த ஒரே கப்பலில் சென்றது ) மிக வெற்றி கரமாக அமெரிக்காவிற்கு கடல் வழி இணைப்பை அமைத்தனர் ...
















மிக மிக மதி நுட்பமான கடலுக்கு அடியில் மாட்டிக்கொள்ளும் கேபிளை எடுக்கும் தூண்டில் கருவி !!!


இந்தியாவில் சிப்பாய் கலகம் வந்தவுடனே பயந்து 1861 லே இங்கிலாந்த் இந்திய கடல் வழி தந்தி அமைக்கப்பட்டு விட்டது !! (இது அமெரிக்காவிற்கு முன்பே) இது ஒருமாதம் ஆகும் தகவலை ஒரு நாளில் தரும் .. பல ஊர்களில் பெற்று மாற்றி மாற்றி அனுப்புவதால் இந்த தாமதம் !!

அமெரிக்க அன்றைய ஜனாதிபதி Andrew Johnson மற்றும் ராணி விக்டோரியா பரிமாறிக்கொண்ட வாழ்த்துக்கள்!!!



மேலும் பல சுவாரசிய விசயங்களை பார்ப்போம் நாளை ..

விஜயராகவன் கிருஷ்ணன்